தற்போது கோடைக்கால வெயில் சுட்டெரிக்கின்றது. அதனால் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருமையடைகின்றது.
எனவே, அனைவருக்கும் இருக்கும் பெரிய கேள்வி ” முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருப்பது எப்படி..? ”
இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.
கடைகளில் சென்று பேசியல் போன்றவற்றை மேற்கொள்கின்றோம்.இவை தற்காலிக தீர்வுகளையே தரும்.
எனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வீட்டிலேயே டைமன்ட் பேசியல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
கிளென்சிங்
முதலில் சருமத்தை மென்மையான ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பைப் பயன்படுத்தி நன்கு கழுவவும்.
அடுத்ததாக காய்ச்சி ஆற வைத்த பாலை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
கண்கள் மற்றும் உதடுகளை தவிர்த்து மெதுவாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
பின்னர் அப்படியே பத்து நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவி துடைக்கவும்.
ஸ்க்ரப்
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் அல்லது கோதுமை மாவை பால் அல்லது ரோஜா நீருடன் கலந்து பேஸ்ட் போல தயாரிக்கவும்.
இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.
கண்கள் மற்றும் உதடுகளில் தடவுவதைத் தவிர்க்கவும். இது 5 நிமிடங்கள் அப்படியே ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தைத் துடைத்து விடுங்கள்.
மசாஜ்
ஒரு கிண்ணத்தில் தயிர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இதை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தடவி விரல்களை மேல் நோக்கி மசாஜ் செய்யவும்.
பின்னர் 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
பேஸ் பேக்
ஒரு கிண்ணத்தில் சந்தனத்தூள், ரோஜா நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும்.
இந்த கலவையை கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகம் மற்றும் கழுத்தில் சமமாகத் தடவி அப்படியே ஆறவிடுங்கள்.
15 நிமிடங்கள் கழித்து ஃபேஸ் பேக்கை கழுவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்.
டோனர்
ஒரு ஸ்பிரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் ஸ்பிரே செய்யவும்.
அடுத்ததாக இத்துடன் சேர்த்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும்.
இந்த ஐந்து படிகளையும் சரியாக செய்து முடிப்பதுதான் டைமண்ட் பேசியல் இதை வீட்டிலேயே நீங்கள் எளிதாக செய்யலாம்.
வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர செய்து வந்தால் சிறந்த பலனை அடைய முடியும்.