Home இலங்கை அரசியல் புலம்பெயர் ஈழத்தமிழர்களை விரோதிகளாக நோக்கும் அநுர : அடிப்படைவாத உச்சத்தில் அரசு

புலம்பெயர் ஈழத்தமிழர்களை விரோதிகளாக நோக்கும் அநுர : அடிப்படைவாத உச்சத்தில் அரசு

0

புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசு ஒரு விரோத மனப்பான்மையோடு பார்ப்பதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுர குமார திஸாநாயக்கவின் அடிப்படைவாதம் என்பது அப்போதிலிருந்து இப்போது வரை மாறாமல் அப்படியே உள்ளது.

பௌத்த மதம், சிங்கள நாடு மற்றும் சிங்கள அரசு என்ற ரீதியிலேயே அவர்கள் தொடர்ந்து செயற்படுகின்றனர் அத்தோடு, தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினையும் தெரிந்தும் அவர்கள் அவர்களுடைய அடிப்படைவாதத்திலிருந்து விலகவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை, புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் நிலை, அநுர அரசின் தற்போதைய நிலை மற்றும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் குறித்த அநுரவின் சிந்தனை என்பவை தொடர்பில் அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு, 

https://www.youtube.com/embed/5KC0JDBcLjg

NO COMMENTS

Exit mobile version