Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் முதலீட்டாளர்களான புலம்பெயர் தமிழர்கள்! நாமல் பகிரங்கம்

அரசாங்கத்தின் முதலீட்டாளர்களான புலம்பெயர் தமிழர்கள்! நாமல் பகிரங்கம்

0

உள்நாட்டு யுத்தத்திற்கு ஆதரவாக பணம் அனுப்பி வைத்த புலம்பெயர் தமிழர்கள் இன்று அரசாங்கத்தால் முதலீட்டாளர்களாக கருதப்படுகின்றனர் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆனால் யுத்தத்தை நிறைவு செய்த படையதிகாரிகளை யுத்த குற்றவாளிகலாக்கி சிறையில் அடைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடற்படைத் தளபதியை சிறையில்

”உதாரணமாக முன்னாள் கடற்படைத் தளபதியை சிறையில் அடைத்துள்ளனர்.

அத்தோடு திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களை சுதந்திரமாக இயங்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அவர்கள் நினைத்த நபர்கள் கொலை செய்கின்றனர். ஸ்னைப்பர் துப்பாக்கியில் யானைகள் சுட்டுக் கொல்லப்படுவதாக அரசாங்கமே தெரிவிக்கிறது.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் ஸ்னைப்பர் துப்பாக்கியில் யானைகள் சுட்டுக் கொள்ளுவதோடு நித்திரையில் இருக்கும் குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு நடப்பதற்கு சுதந்திரம் கொடுத்திருப்பதை சிந்தித்தால் அரசாங்கத்தின் ஒரு கையும் இதில் இணைந்துள்ளதாக எமக்கு தோன்றுகிறது” என்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version