லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்க இருக்கும் கூலி படத்தின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரஜினி ஒரு துறைமுகத்தில் இருக்கும் குடோனில் தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை அடித்து நொறுக்குவது போல காட்சி இருந்தது.
மேலும் ரஜினி அவரது பழைய படத்தின் ஒரு வசனத்தையும் பேசி இருப்பார். இதை நடிகர் மற்றும் ஸ்டாண்டப் காமெடியன் கார்த்திக் குமார் கலாய்த்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இப்போது வரும் படங்கள் ட்ரெய்லர் எல்லாமே ஒரே மாதிரி இருக்கு என அவர் கூறி இருக்கிறார். இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாபக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளம் அருகில் அசத்தல் போஸ்! பாண்டிச்சேரியில் என்ன செய்கிறார்?
ரஜினியை கலாய்த்தாரா?
வெங்கட் பிரபு வீடியோவை ஷேர் செய்து ரஜினியை கலாய்த்து இருக்கிறார் என ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட அதற்கு வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“இல்லை, இல்லை. இது கமர்சியல் படம் எடுக்கும் எங்களை பற்றியது தான். அவர் (கார்த்திக் குமார்) சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான்.”
“கமர்ஷியல் டெம்ப்லேட் இல்லாமல் எதாவது புதிதாக தர முயற்சித்தால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாரா?” என வெங்கட் பிரபு பதில் அளித்து இருக்கிறார்.
No no no!!! It’s about all of us who are doing commercial flick!! And what he is sayings is kinda true too!! If we try to give something different from the regular commercial template!! are the fans ready to accept 🤔
— venkat prabhu (@vp_offl) April 28, 2024
மேலும் தானே பழைய பாடல்களை பயன்படுத்தி இருக்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
https://t.co/Ip6cAKcIcd
— venkat prabhu (@vp_offl) April 28, 2024