Home இலங்கை அரசியல் இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து வெளியான தகவல்

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து வெளியான தகவல்

0

இந்திய இலங்கை உடன்படிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தொலைக்காட்சி செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அனுமதி

இதனால் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேவையானவர்கள் இவற்றை தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டு உரிய நேரத்தில் இந்த ஆவணங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version