Home இலங்கை சமூகம் இலங்கையில் அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

இலங்கையில் அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

0

தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நேற்று (09.12.2024) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கருத்திற்கொண்டு, இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தற்போது ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நிறுவனங்களுக்கு இடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை வழங்கி புதிய தொழிநுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசு கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்க்கது.

NO COMMENTS

Exit mobile version