Home இலங்கை சமூகம் வசந்தவின் உடலை எட்டி கூட பார்க்காத பிரபலங்கள்

வசந்தவின் உடலை எட்டி கூட பார்க்காத பிரபலங்கள்

0

அத்துருகிரியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகரான கிளப் வசந்தா எனப்படும் வசந்த சுரேந்திர பெரேராவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.

அவரது உடல் தற்போது கொழும்பு ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த எச்சரிக்கை

அவரின் உடலை மலர்ச்சாலையில் வைக்கக் கூடாது என வெளிநாடுகளில் இருந்து பூக்கடை உரிமையாளர்களுக்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

இதனால் மலர்ச்சாலையை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இறுதி அஞ்சலி

வசந்தா உயிருடன் இருந்தபோது அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பல உயர்தர பணக்கார வர்த்தகர்கள் இது வரை இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை.

ஜயரத்ன மலர்ச்சாலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தாலும், அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக இறுதி ஊர்வல அதிகாரிகள் கூறுகின்றனர்.

Source: https://ibctamil.com/article/dignitaries-not-come-pay-tribute-vasantha-s-body-1720856608

NO COMMENTS

Exit mobile version