மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம் எனவும் அந்தச் சபைகளை மக்கள்
பிரதிநிதிகளே ஆள வேண்டும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைகளை ஆளுநர்கள் ஊடாக ஆள்வது ஜனநாயகம் அல்ல.
அதிகாரப் பகிர்வு
எனவே, தமது பிரச்சினைகளை
தமது பிரதிநிதிகள் ஊடாகத் தீர்த்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்க
வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.
எனவே, தேர்தல்
உடனடியாக நடத்தப்பட வேண்டும். அநுர அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
