Home விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்த இலங்கை வீரர்

டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்த இலங்கை வீரர்

0

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன(Dimuth Karunaratne) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நேற்று (8) 7,000 ஓட்டங்களைக் கடந்தார்.

ஓவல்(oval) மைதானத்தில் இலங்கை(sri lanka) மற்றும் இங்கிலாந்து(england) அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் அவர் இந்த ஓட்டங்களை கடந்தார்.

முதல் இனிங்சில் சொதப்பல்

மூன்றாவது டெஸ்ட் தொடங்கும் போது, ​​திமுத் 6,990 ஓட்டங்களை சேகரித்து 7,000 ஓட்டங்களை விட 10 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தார்.

ஆனால், முதல் இனிங்சில் திமுத் 09 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

2012ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டியில் 123ஆவது வீரராக தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய திமுத், 94 போட்டிகளில் 180 இனிங்ஸ்களில் விளையாடி 16 சதங்கள் மற்றும் 38 அரைச்சதங்களுடன் 7,007 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

7,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த நான்காவது இலங்கை துடுப்பாட்டவீரர் திமுத், மேலும் இந்தச் சாதனையைக் கடந்த உலகின் 57வது துடுப்பாட்ட வீரர் ஆவார்.

இலங்கையின் நான்காவது வீரர்

குமார் சங்கக்கார(Kumar Sangakkara) (12,400), மஹேல ஜயவர்தன(Mahela Jayawardena) (11,814) மற்றும் ஏஞ்சலோ மத்யூஸ்(Angelo Mathews) (7731) ஆகியோர் மட்டுமே ஏழாயிரம் டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்து இலங்கைக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஆவர்

NO COMMENTS

Exit mobile version