Home சினிமா மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நித்திலன்!! எவ்ளோ தெரியுமா?

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நித்திலன்!! எவ்ளோ தெரியுமா?

0

மகாராஜா

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14 தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்க்கி உள்ளார்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 7 நாட்களில் உலகளவில் ரூ. 58 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சம்பளம்

இந்நிலையில் மகாராஜா படத்திற்காக இயக்குனர் நித்திலன் ரூபாய் 3 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை 3 கோடியில் இருந்து 4 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில்
சொல்லப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/director-nithilan-swaminathan-salary-details-1718951741

NO COMMENTS

Exit mobile version