Home இலங்கை சமூகம் ஈரான் அதிபரால் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா: பாரிய அனர்த்தம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

ஈரான் அதிபரால் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா: பாரிய அனர்த்தம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

0

ஈரான் அதிபரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று நாளை(29) விசேட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 7000 பேர்

அபாயம்

அத்தோடு, அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மலித்தகொல்ல என்ற சாய்வான பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தை அதிகாரிகள் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

மண்சரிவுக்கான அறிகுறி

உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீர் நிரப்பப்பட்டமையினால் நீர் பாயும் நிலை மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகளுடன் வண்டல் மண் காணப்படுவதாக பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பதுளை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் இன்று அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகள்: காவல்துறையினரின் முக்கிய அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version