டித்வா சூறாவளி போன்ற பெரிய பேரிடர்களுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்கள் 40% அதிகரிக்கக்கூடும் என்று உலகளாவிய ஆராய்ச்சி காட்டுவதாக இதயநோய் நிபுணர் மருத்துவர் கோதபயா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
திடீர் இழப்பு, அதிர்ச்சி மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை கடுமையான உளவியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன, இது குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நபர்களில் மாரடைப்பைத் தூண்டும்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்கள்
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு மற்றும் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள்(blood-thinning drugs) உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை எடுப்பதில் சிரமப்படுகிறார்கள், இது அவர்களின் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
பொதுமக்கள் தமது மன வலிமையைப் பராமரிக்கவும், போதுமான தூக்கத்தைப் பெறவும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார். மார்பு அசௌகரியம் அல்லது இதயம் தொடர்பான அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அவர் அறிவுறுத்தினார்.
மாரடைப்பு ஏன் அதிகரிக்கிறது
பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு ஏன் அதிகரிக்கிறது
• கடுமையான மன அழுத்தம் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
• மோசமான தூக்கம் மற்றும் சோர்வு இதய செயல்பாட்டை சீர்குலைக்கிறது
• அத்தியாவசிய மருந்துகளைத் தவறவிடுவது ஆபத்தானது
• ஒழுங்கற்ற உணவு சீனி கட்டுப்பாடு மற்றும் இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது
• புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் இதய அழுத்தத்தை மோசமாக்குகிறது
அதிக ஆபத்தில் உள்ளவர்கள்: இதய நோயாளிகள், முதியவர்கள், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் உணர்ச்சி அல்லது உடல் அழுத்தத்தில் உள்ளவர்கள்.
பொதுமக்களுக்கு விரைவில் உதவி பெறவும், கிடைக்கக்கூடிய சேவைகளைப் பயன்படுத்தவும் அவர் நினைவூட்டினார்:
சுவ செரிய அம்புலன்ஸ் – 1990
இலங்கை STEMI மன்ற ஹொட்லைன் – 076 317 7312
