30 நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு எதிராக நீதிச் சேவை ஆணைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிச் சேவைக்குள் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதான நோக்கம்
குறித்த சீர்திருத்தங்கள் இலங்கையில் நீதித்துறை அமைப்பின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய கடந்த பத்து நாட்களில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஆறு நீதிபதிகளை ஆணைக்குழு இடைநீக்கம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
