Home இலங்கை சமூகம் நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் ஒழுக்காற்று நடவடிக்கை

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் ஒழுக்காற்று நடவடிக்கை

0

சிறிலங்கா சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 2022 முதல் இதுவரை 300 முதல் 350 வரையான விசேட மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் ஏழு விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்… எங்கு உள்ளார் தெரியுமா!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட வைத்தியர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, ​​குறித்த வைத்தியர் விடுப்புக்கு முறையான அனுமதி அளித்துள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பரிசோதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு

சுகாதார அமைச்சு

விசா வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டிய போதிலும், நாட்டை விட்டு வெளியேறிய சில விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அனுமதியின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்ற விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் நிரந்தர வேலைவாய்ப்பை வலியுறுத்தி வீதிக்கிறங்கிய பட்டதாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version