Home இலங்கை சமூகம் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு செப்டம்பரில் சிறப்பு தள்ளுபடி!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு செப்டம்பரில் சிறப்பு தள்ளுபடி!

0

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் செப்டம்பர் 01 ஆம் திகதி தனது 46வது ஆண்டு நிறைவை சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கொண்டாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை சிறிலங்கன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் வணிக வகுப்பு பற்றுச்சீட்டுக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20% தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வகுப்பு

அத்துடன், பொருளாதார வகுப்பு பற்றுச்சீட்டுகளுக்கு 15% தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விசுவாசத் திட்டத்தின் (loyalty program) உறுப்பினர்களுக்கும் 46% போனஸ் மைலேஜ் கொடுப்பனவு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version