Home இலங்கை குற்றம் காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிப்பு

காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிப்பு

0

புத்தளம், சேரக்குளிய கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,470 போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பைகளில் இந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

தேடுதல் நடவடிக்கை

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கடற்படைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்பபன்னி,  கடற்படை கப்பலான கஜபாவுடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version