Home இலங்கை பொருளாதாரம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய மின்சார சபை அதிகாரிகள்

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய மின்சார சபை அதிகாரிகள்

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (5) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எரிசக்தி விநியோகம் 

அத்தோடு, எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தொடர்ச்சியான எரிசக்தி விநியோகம் மற்றும் எரிசக்தி துறைக்கு அமைவாக தற்போதைய எதிர்பார்ப்பு நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டீ.எம்.உதயங்க ஹேமபால, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உள்ளிட்டவர்களுடன் மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்லாபிட்டிய உள்ளிட்ட மின்சார சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version