Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் இடம்பெற்ற உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்

முல்லைத்தீவில் இடம்பெற்ற உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்

0

Courtesy: தவசீலன்

எதிர்வரும் நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெற்வுள்ள நிலையில், முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்வுள்ள தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரியவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தெளிவூட்டல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

[XB0NOLC
]

3947 பேர் வாக்களிப்புக்கு தகுதி

மேலும், வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 3947 பேர் இம்முறை தபாமூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இதன்படி கலந்துரையாடலில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் பீ.ரகுநாதன் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version