Home இலங்கை சமூகம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்

காணாமல் போனோர் அலுவலகத்தினால் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்

0

கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று(29.10.2024) காலை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் காணாமல் போனோர்  பற்றிய அலுவலகத்தின்
உறுப்பினர்களான தியாகராஜா யோகராஜா, அர்பா தாசிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஆக்கப்பட்டோரின் உறவுகள்

இந்நிலையில்,  ஏனைய மாவட்டங்களிலும் இது போன்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும், காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்த நேரமும் தங்களின் முறைப்பாடுகளை எமது ஐந்து
பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்க முடியும் என தியாகராஜா யோகராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை 21000விண்ணப்பங்கள்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 15000வரையான விண்ணப்பங்களுக்கு பூர்வாங்க விசாரணை
நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், 6500முறைப்பாடுகளுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்று
அதற்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தியாகராஜா யோகராஜா விளக்கமளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version