Home இலங்கை சமூகம் திருகோணமலையில் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

திருகோணமலையில் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

0

திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழிலால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான
கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம் (20.11.2024) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 07.11.2024 அன்று
நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டு,
தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்கள் மூலம் மீன்களை கொல்வதற்கு எதிராக
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. 

கடற்றொழிலாளர்களின் நலன் 

மேலும், தற்போதைய அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு எவரது செல்வாக்கிற்கும்
அஞ்சாமல் தமது கடமைகளை மேற்கொள்ளுமாறும், அரசியல் செல்வாக்கு இன்றி தமது
கடமைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால் கடற்றொழில் மக்களின்
நலனுக்காக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில், மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில்
கூட்டுத்தாபனம், கொட்பே கடற்றொழில் துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்
கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version