Home இலங்கை சமூகம் பூநகரி கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

பூநகரி கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

0

கிளிநொச்சி (Kilinochchi) – பூநகரி பிரதேசத்தில் ஒரு சுத்தமான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் என்ற செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட
வேண்டிய வேலை திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது மாவட்ட அரச அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட
செயலகத்தில் இன்று (5) நடைபெற்றுள்ளது.

கலந்துரையாடல்

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா செயற் திட்டத்தின் ஒரு
அங்கமாக ஒரு சுத்தமான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலா தலம் என்ற தொனிப்
பொருளில் எதிர்வரும் 16ஆம் திகதி பூநகரி பிரதேச கரையோரத்தில் மேற்கொள்ளப்பட
வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் சுற்றுச் சூழல் அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம் கடற்கரையினர், பொலிஸார் இராணுவத்தினர், பூநகரி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், மற்றும்
துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version