Home இலங்கை சமூகம் மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் நோய்

மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் நோய்

0

மேல் மாகாணத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவது குறித்து சுகாதார
நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமைக்கு பெரும்பாலும் அதிகப்படியான சீனி நுகர்வு காரணமாகும் என இலங்கை
மருத்துவ சங்கத்தின் நிபுணர் மணில்கா சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.

சராசரியாக, இலங்கையர்கள் ஆண்டுதோறும் 25 முதல் 30 கிலோகிராம் வரை சீனியை
உட்கொள்கிறார்கள்.

எதிர்கால சந்ததி

அதேநேரத்தில் சிறுவர்கள் மட்டும் ஒரு நாளைக்கு 20 தேக்கரண்டி சீனியை
உட்கொள்கிறார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார்.

இதேவேளை, நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா
நோய்கள் இப்போது நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் 80 சதவீதத்துக்கு
காரணமாகின்றன என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கவலையளிக்கும் விதமாக, சிறுவர்களிடையே இந்த நிலைமைகள் அதிகரித்து வருவதாக
மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க உடனடி வாழ்க்கை முறை மாற்றங்களின் அவசியத்தை
வலியுறுத்தி, சீனி மற்றும் உப்பு உட்கொள்ளலைக் குறைக்குமாறு இலங்கை மருத்துவ
சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version