Courtesy: H A Roshan
திருகோணமலை (Trincomalee) மானாண்டான் குளம் பகுதில் வாழ்ந்த பொதுமக்களின் பூர்வீக காணிகளை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்குரிய பல்வேறு முன்னெடுப்புகள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஒரு அங்கமாக நேற்று (22) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியை மானாண்டான் குளம் விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து சென்று தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
காணி அனுமதிப் பத்திரம்
இதன்போது திருகோணமலை முத்துநகர் மானாண்டகுளம் பகுதியில் சுமார் 1970ஆம் ஆண்டில் இருந்து 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாகவும், அங்கே அவர்களின் வாழ்வாதார நிலத்தில் விவசாயம் செய்து வந்ததாகவும், அவர்களில் பலபேருக்குக் காணி அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
சில பேருக்குப் பதிவு செய்து பின்னர் வழங்குவதாக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளரால் விபரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அக்காணியினை தற்பொழுது வன பாதுகாப்பு திணைக்களம் தங்களுடைய காணியாக கூறி வருவதாகவும் அக் காணியினை மீண்டும் பெற்று விவசாயத்தினை மேற்கொள்வதற்கும் அனுமதி பெற்றுத்தருமாறு மானாண்டான் குளக் கிராமத்தில் வாழ்ந்த பொது மக்களினால் சில நாட்களுக்கு முன்பு கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.