Home இலங்கை சமூகம் பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் இடையூறு: பயணிகள் பெரும் அசெளகரியம்

பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் இடையூறு: பயணிகள் பெரும் அசெளகரியம்

0

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி(Kilinochchi), பளை
மத்திய பேரூந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர
வண்டிகளை நிறுத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வேலைக்கு செல்வோர் தங்களது வாகனங்களை அந்த பேரூந்து
தரிப்பிடத்திற்குள் நிறுத்திச் செல்வதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக
தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் பளை பேரூந்து தரிப்பிடத்தில்
இருந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் செயற்பாடுகளில்
ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் உட்பட பயணிகள் பேரூந்து நிலையத்தை விட்டு வெளியேறி சிரமங்களுக்கு உள்ளாவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version