டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் கொத்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மன நலனை மேம்படுத்த ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கலைஞர்கள் குழு ஒன்று கொத்மலையில் உள்ள அம்பதலாவ இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று, அங்கு தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு, தொடர்ச்சியான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது.
மக்களின் மனநிலை
மஹாவலி மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தரிந்திரி பெர்னாண்டோ, பிரியந்த சிசிர குமார,
செமினி இடமல்கொட, கலன குணசேகர, தசுன் பத்திரன, சதுரன ராஜபக்ச, சமத்கா லக்மினி மற்றும் தனுஷி திசாநாயக்க உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் மனதை குணப்படுத்த உதவுவதற்காக அவர்கள் இடம்பெயர்ந்த மக்களுடன் பாடல்களைப் பாடி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டம் ஒரு முகாமுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் கொத்மலை பகுதி முழுவதும் நிறுவப்பட்ட பல இடம்பெயர்ந்தோர் முகாம்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
