Home இலங்கை சமூகம் புயலுக்கு முன்பே எச்சரித்த யாழ். பல்கலை பேராசிரியர்.. அரசாங்கம் அலட்சியம் செய்தது ஏன்..!

புயலுக்கு முன்பே எச்சரித்த யாழ். பல்கலை பேராசிரியர்.. அரசாங்கம் அலட்சியம் செய்தது ஏன்..!

0

இலங்கையில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தொடர்பில் ஏழு நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்த எச்சரிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மையமாக மாறிய டிட்வா சூறாவளி நாட்டின் அனைத்து மூலைகளிலும் பாதிப்புக்களையும், சேதங்களையும் உருவாக்கி நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது. 

அதேவேளை, மேலும் பல உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான ஒரு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடுமையான சேதங்கள் 

இந்நிலையில், அரசாங்கம் குறித்த அனர்த்தம் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அலட்சியமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், சுமார் ஏழு நாட்களுக்கு முன்னரே அதாவது இலங்கைக்கு புயல் வரும் முன்னரே யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த அனர்த்தம் குறித்து அவர் முன்னதாகவே விடுத்த எச்சரிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் ஒரு பேரனர்த்தத்திற்கு வாய்ப்புள்ளது. 

ஆனால், எங்கள் நாட்டு மக்களுக்கு அது தொடர்பான எச்சரிக்கை முழுமையாக வழங்கப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகின்றது. 

மிக மிக கனமழை மற்றும் வெள்ள அனர்த்தத்தை முழு நாடுமே எதிர்கொள்ளும் தோன்றுகின்றது. நண்பகலுக்கு பின்னர் வடக்கில் மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

உரிய நடவடிக்கைகள் 

இந்நிலையில் தான், இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பில் மக்களை உரிய முறையில் அறியப்படுத்தாமை தொடர்பில் தற்போது விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பதிவில் பல சந்தர்ப்பங்களில் விளக்கமாகும், தெளிவாகவும் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடைய கணிப்பின் மற்றும் எதிர்வுகூறல்களின் படி இந்த பேரிடர் அனர்த்தம் இலங்கையை முழுவதுமாக நாசமாக்கியுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த மோசமான பேரிடர் நிலைமை தொடர்பில் ஒழுங்கான முறையில் மக்கள் அறிவுறுத்தப்பட்டு அதற்கு முன்னரே பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பப்பட்டிருந்தால் இன்று பல உயிர்கள் இறுதி சடங்கு கூட இன்றி விண்ணுலகம் செல்ல வேண்டிய நிலை வந்திருக்காது என பலரும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version