டிட்வா வானிலை தொடர்பான பேரழிவுகள் காரணமாக காய்கறி உற்பத்தியில் 20 சதவீத
குறைவு மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
காய்கறி விலை
நுவரெலியா போன்ற மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் புள்ளிவிபரங்களை அவர்
இதற்காக கோடிட்டுள்ளார்.
இதன் விளைவாகவே பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்யும் முன்னைய
முடிவை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
பேரிடர் ஏற்பட்டதை அடுத்து காய்கறி விலை அதிவேகமாக உயர்ந்தது
எனினும் இப்போது, விலை குறைந்துள்ளன.
அத்தியாவசியப் பொருட்கள்
ஆனால் இன்னும் பேரழிவுக்கு முன்னரான நிலைக்கு திரும்பவில்லை. காய்கறிகளை வளர்க்கும் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான நுவரெலியா போன்ற
பகுதிகளிலிருந்து வரும் அறிக்கைகளின்படி, விநியோகத்தில் 20 சதவீதம் குறைப்பு
ஏற்பட்டுள்ளதாக சந்திரகீர்த்தி குறிப்பிட்;டுள்ளார்.
இதேவேளை அரிசி போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திலும் எந்த
பற்றாக்குறையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேரழிவு ஏற்பட்ட பின்னரே அரசாங்கம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரை
நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
