Home முக்கியச் செய்திகள் பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்

பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்

0

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலை

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் சந்தேக நபரைக் கைது செய்ய ஐந்து காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, கல்னேவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தாங்கள் உறுதியளித்தவாறு, நீதிமன்றத்திற்கு முற்படுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் பின்னணி

இவ்வாறனாதொரு பின்னணியில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, சந்தேக நபர், கிரிபந்தலகே நிலந்த மதுர ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் கல்னேவவில் உள்ள நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ,இராணுவத்திலிருந்து தப்பி வந்ததன் பின்னர் 34 வயது சந்தேக நபர் இதற்கு முன்னதாக தேரராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/vvTzXc6z2X8

NO COMMENTS

Exit mobile version