Home இலங்கை சமூகம் நாடாளுமன்றம் சென்ற வைத்தியர் அர்ச்சுனா

நாடாளுமன்றம் சென்ற வைத்தியர் அர்ச்சுனா

0

சாவகச்சேரி வைத்தியசாலையில் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்
அர்ச்சுனா (Dr.Archuna) நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) சந்தித்த வைத்தியர்
அர்ச்சுனா கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  வைத்தியர் அர்ச்சுனா தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

மிகப்பெரிய துரோகி

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது.

இந்தப்
பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ்
மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில்
நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு
மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.

தமிழ் சொந்தங்கள்

இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர
போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணாமார்கள் அக்காமார்கள்,
தம்பிகள் மற்றும் தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது
மட்டுமே.

எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று
சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும்
என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு எனக்கான மக்களின்
போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன்
என்பதை தெரிவிக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version