Home இலங்கை குற்றம் ஐந்தரைக் கோடி ரூபா பண மோசடி : வைத்தியர் கைது

ஐந்தரைக் கோடி ரூபா பண மோசடி : வைத்தியர் கைது

0

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் 5 கோடியே 50 இலட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன, வேபட பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் கைது

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version