Home இலங்கை சமூகம் யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளம் வைத்தியர்: வெளியான காரணம்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளம் வைத்தியர்: வெளியான காரணம்

0

யாழ்ப்பாணம் (jaffna) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலை விடுதியில் (Base Hospital, Point Pedro) நேற்று (12) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது குறித்த  வைத்தியர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

யாழில் வைத்தியசாலை விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் வைத்தியர்

பிரேத பரிசோதனை

கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்தியமையே அவரது மரணத்திற்குக் காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெண்ணியல் நோய் மருத்துவராக கடமை புரிந்து வரும் பிரேமானந்தராசா கிருஷ்ணானந்தா (வயது- 30) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தை (jaffna) பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக கொழும்பில் (colombo) வசித்து வருகின்றனர். வைத்தியரின் அருகில் திறந்த நிலையில் பேனா ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்

வெள்ளவத்தையில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version