Home இலங்கை சமூகம் இலங்கையில் அதிகரிக்கும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை

இலங்கையில் அதிகரிக்கும் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை

0

நாடு முழுவதும் 1,139 சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(07.08.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் சிறப்பு பராமரிப்பு மருத்துவமனைகளில் 2042 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு, பதவி விலகல் மற்றும் சேவைகளை வெற்றிடமாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் நாடு 570 சிறப்பு மருத்துவர்களின் சேவைகளை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பற்றாக்குறைக்கான காரணங்கள்

2020 முதல் 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 233 சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

82 பேர் சேவைகளை வெற்றிடமாக்கியுள்ளனர்.

மேலும், 7 பேர் பதவி விலகியுள்ளனர். 57 பேர் பல்வேறு தேவைகளுக்காக பிற நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 191 சிறப்பு மருத்துவர்கள் சம்பளமில்லா விடுப்பில் சென்றுள்ளனர் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது இருக்கும் சிறப்பு மருத்துவர்களில் 201 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 546 பேர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version