Home இலங்கை சமூகம் அரச மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

அரச மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

0

அரசாங்க மருத்துவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் இடமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்திருந்தனர்.

இன்றைய தினம் காலை 8.00 மணி முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இடமாற்றங்கள் 

எனினும், சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது சாதகமான பதில்கள் கிடைக்கப் பெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இடமாற்றங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

NO COMMENTS

Exit mobile version