Home இலங்கை சமூகம் இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

0

கடந்த இரண்டு வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு
வெளியேறியுள்ளனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தை ஊடகங்களிடம்
குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள்
நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.

2028ஆம் ஆண்டில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பேராசிரியர் எச்சரிக்கை

மயக்கவியல் வைத்திய நிபுணர்கள்

இதேவேளை, அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த மூன்றாவது
மயக்கவியல் வைத்திய நிபுணரும், அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வெளிநாட்டுக்குச்
சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேவையாற்றிய இரண்டு மயக்கவியல்
வைத்திய நிபுணர்கள் முன்னறிவிப்பின்றி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு – வெளியான அறிவித்தல்

ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்தாக மாறப்போகும் இஸ்ரேல் – ஈரான் முடிவுகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version