Home இலங்கை சமூகம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள நம்பிக்கை

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் மருத்துவர்கள் வெளியிட்டுள்ள நம்பிக்கை

0

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget) சுகாதாரத்
துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்ற படியாக
இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர்
மருத்துவர் பிரபாத் சுகததாச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார சேவையில் நிலவும் தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தீர்க்க
ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதில்
தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை 

சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட இலங்கையின் சுகாதார
சேவைகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO)
அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகவும், தேசிய சவால்கள் இருந்தபோதிலும் சுகாதார
ஊழியர்கள் தங்கள் கடமைகளைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்கள் பரந்த அளவிலான சேவைகளை வழங்கினாலும், சமூக ஊடகங்கள்
பெரும்பாலும் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தி, அவர்களின் பரந்த
பங்களிப்பைப் புறக்கணிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, பல சுகாதார
நிபுணர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர் என்றும், இந்தப்
பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வு காணப்படாவிட்டால் சுகாதார நெருக்கடி மேலும்
மோசமடையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version