Home இலங்கை சமூகம் இளைஞர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இளைஞர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

0

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் விசேட தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு (Ministry Of Health Sri Lanka) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இன்று (04.11.2024) முதல் எதிர்வரும் 09ஆம் திகதி வரை குறித்த செயற்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்மை நோயாளர்கள்

இலங்கை தட்டம்மை (சின்னமுத்து) ஒழிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், கடந்த வருடம் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் நிறுவகத்தின் தலைமை தொற்றாநோய் வைத்திய நிபுணர் ஹசித திசேரா இது தொடர்பில் கருத்தை தெரிவிக்கையில்,

” இளைய தலைமுறையினரில் குறிப்பாக இதற்கு முன்பு தட்டம்மை தடுப்பூசி பெறாதவர்கள், அல்லது பெரும்பாலும் தவறியவர்கள், தட்டம்மை தடுப்பூசியிலிருந்து முழு பாதுகாப்பைப் பெறாதவர்கள் அல்லது ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

முழு பாதுகாப்பு

அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் தட்டம்மை தடுப்பூசி மூலம் கடந்த 10-20 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் மூலம் அம்மை நோயை முழுமையாக ஒழிக்க முடிந்தது.

ஆனால், பிற நாடுகளில் இருந்து நமது சுற்றுச்சூழலில் தட்டம்மை வைரஸ் நுழைந்தால், அது அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அந்த ஆபத்தை குறைக்கும் நோக்கத்திற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version