Home இலங்கை சமூகம் நாளை முதல் அரச மருத்துவர்கள் எடுக்கப் போகும் அதிரடி தீா்மானம்

நாளை முதல் அரச மருத்துவர்கள் எடுக்கப் போகும் அதிரடி தீா்மானம்

0

 இலங்கையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நாளைய தினம் முதல் சில முக்கிய சேவைகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களினால் வழங்கப்படும் சில முக்கிய சேவைகளே இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மருந்தகங்களில் மருந்து கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் மருந்து சீட்டுக்கள் மற்றும் தனியார் தனியார் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சீட்டுகள் என்பன வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுகாதார துறையில் சில முக்கிய துறைகளுக்கு அரசாங்கம், தீர்வு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் சுகாதாரத் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகத்ததாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நாளை காலை 8 மணி முதல் நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் சில முக்கிய சேவைகளை, மட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது நோயாளிகளை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version