வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் உயிரியல்
மருத்துவ பொறியியலாளர் (Biomedical Engineer) தரம் III பதவிக்கான வெற்றிடங்களை
நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, பதவிக்கான வெற்றிடங்கள் திறந்த அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறையின் கீழ்,
கட்டமைக்கப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவுச் செய்யப்படவுள்ளது.
வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம்
இதற்கான
விண்ணப்பங்கள் எதிர்வரும் 2026.01.05 வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.
மேலும், இது தொடர்பான முழுமையான அறிவித்தல் மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.np.gov.lk எனும்
இணையத்தளத்தில் “Exam and Recruitment ️ Advertisement” எனும் பகுதியின்
ஊடாகப் பார்வையிட முடியும்.
இந்த நிலையில், தகைமையுடைய விண்ணப்பதாரிகள் குறித்த விளம்பரத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மாகாண
பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
