Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியாக பதிவான மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியாக பதிவான மாற்றம்

0

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (15.06.2026) வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி

அதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 34 சதமாக காணப்படுகிறது.

விற்பனை பெறுமதி 336 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 331.42 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 341.36 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1781506075

NO COMMENTS

Exit mobile version