இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினம் (17.06.2026) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.90 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்று (16) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 338.22 ஆக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/dollar-rate-today-in-sri-lanka-1781682785
