Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி! அரசாங்கத்தின் முடிவால் பதிவான அதிரடி மாற்றம்

வாகன இறக்குமதி! அரசாங்கத்தின் முடிவால் பதிவான அதிரடி மாற்றம்

0

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான தினசரி வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான சுங்க இறக்குமதி வரிகள் மீது தற்காலிக கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இக்கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், ஒரேநாளில் 88 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்டது.

வெளிநாட்டு செலாவணி செலவினம்

இருப்பினும், இந்த கொள்கை மாற்றமானது இறக்குமதி சார்ந்த வெளிநாட்டு செலாவணி செலவினங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக இலங்கை நாளொன்றுக்கு சராசரியாக 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில், வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் மதிப்பு அதிகரித்ததன் காரணமாக, இந்தத் தொகை நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது. இருப்பினும்ட தற்போது இது குறைந்து வருகின்றது.

உதாரணமாக, ஜூன் மாதத்தில் தினசரி சராசரி செலவினம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இதன் தாக்கம் தெரிகின்றதுடன், நாம் சரியான தீர்மானங்களை எடுத்துள்ளோம் என்றே நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/vehicle-import-drops-after-new-customs-surcharge-1781756495

NO COMMENTS

Exit mobile version