Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றையதினம்(22.9.2026) அமெரிக்க  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.27 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.28 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435.32 ஆகவும் விற்பனைப் பெறுமதி 449.69ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 385.97 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.95 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.71ஆகவும் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/dollar-rate-today-us-dollar-selling-rate-sl-1790063766

NO COMMENTS

Exit mobile version