செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிபொருள் விலை இன்னும் அதிகமாக இருப்பதால், மேலும் விலை உயர்வை மக்களால் தாங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் விவாதம் நடைபெற்று வருவதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source: https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243
