Home உலகம் பதவியேற்பில் நடனமாடிய ட்ரம்ப் : எலோன் மஸ்க் செய்கையால் வெடித்தது சர்ச்சை (வைரலாகும் காணொளிகள்)

பதவியேற்பில் நடனமாடிய ட்ரம்ப் : எலோன் மஸ்க் செய்கையால் வெடித்தது சர்ச்சை (வைரலாகும் காணொளிகள்)

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் நடனமாடியதும், தொழிலதிபர் எலோன் மஸ்க் செய்த செயல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளதும் பேசுபொருளாகியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததுடன் அதனை வெளிப்படுத்தும் விதமாக அவர் மேடையில் நடனமாடிக்கொண்டே கேக்கை வெடினார்.

அவர் கையில் வாளுடன் நடனம் ஆடிக்கொண்டு கேக் வெட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடனமாடிய ட்ரம்ப்

தொடர்ந்து அவர் தனது மனைவி மெலனியா ட்ரம்ப் உடனும் கைகோர்த்து நடனமாடிய காணொளி வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானதை கொண்டாடும் விதமாக எலோன் மஸ்க்(elon musk) மேடையில் நடனமாடி தனது கைகளை அசைத்து இறுதியில் ‘yesss’ என மகிச்சியுடன் கத்தும் காணொளி வைரலாகி வருகிறது.

எலோன் மஸ்க் செய்கையால் வெடித்தது சர்ச்சை

அதேபோல், ஜெர்மன் சர்வாதிகாரியான ஹிட்லர் பாணியில் எலோன் மஸ்க் மேடையில் வணக்கம் வைத்துள்ளார்.

இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிட்லரை பின்பற்றும் நாஸிக்கள் கடைப்பிடிக்கும் பழக்கத்தை எலோன் மஸ்க் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.   

NO COMMENTS

Exit mobile version