Home இலங்கை அரசியல் தங்கம் வாங்கவுள்ளவர்களுக்கு ட்ரம்பினால் நேர்ந்த நன்மை! விலையில் காத்திருக்கும் மிகப்பெரிய சரிவு

தங்கம் வாங்கவுள்ளவர்களுக்கு ட்ரம்பினால் நேர்ந்த நன்மை! விலையில் காத்திருக்கும் மிகப்பெரிய சரிவு

0

தங்கத்துக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக,  தங்கத்தின் விலையில் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

தங்க விலை  மாற்றம் 

முன்னதாக, சுவிட்சர்லாந்து மற்றும் பிற முக்கிய வர்த்தக மற்றும்
மையங்களிலிருந்து அனுப்பப்பட்ட தங்கங்களின் விலை கடந்த வாரம் அதிகரித்திருந்தன.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, 1 கிலோ மற்றும்
100 அவுன்ஸ் தங்கக் கட்டிகளுக்கு வரிகளை விதிக்கும் என்ற ஊகங்கள் காரணமாகவே
இந்த நிலை ஏற்பட்டது.

எனினும் தற்போது தங்கத்துக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version