Home இலங்கை சமூகம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல்

0

எதிர்வரும் புத்தாண்டு அல்லது வேறும் விசேட தினங்கள் மற்றும் பண்டிகைகளின் போது கடைநிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாழ்த்து தெரிவிப்பதற்காக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்க வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட சுற்று நிருபம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி 

இவ்வாறான பண்டிகை நாட்களில் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிசுப் பொருட்களுடன் வாழ்த்து கூறுவது வழமையாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

எனினும், இனி வரும் காலங்களில் அவ்வாறு பரிசுப் பொருட்களை வழங்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தாம் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து கூற வேண்டுமாயின் தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி ஊடாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version