Home இலங்கை சமூகம் இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0

சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியிடும் போது இராணுவ சீருடைகளுக்கு நிகரான ஆடைகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என இராணுவம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சமூக ஊடகங்களில் (YouTube, TikTok மற்றும் Facebook) தற்போது பரவலாக பரவி வரும் பாடல்கள் மற்றும் குறுந்திரைப்படங்களின் மூலம் இவ்வாறு இராணுவ சீருடைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் சின்னங்கள் மற்றும் அதிகாரபூர்வ உடைகள் அனுமதியின்றி தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இராணுவ அதிகாரபூர்வ உடைகளை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல் என்பதையும், பலர் தங்கள் அறியாமை காரணமாக இப்படியான செயல்களில் ஈடுபடுவதாகவும் இராணுவம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அறியாமலேயே மேற்கொள்ளப்படும் செயல்கள் காரணமாக, தமது உயிரையும் அங்கங்களையும் நாட்டுக்காக தியாகம் செய்த இராணுவ வீரர்களின் மரியாதைக்கும், இன்று வரை நாட்டை பாதுகாக்கும் இராணுவ உறுப்பினர்களின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மிகுந்த மரியாதையுடன் அணிகிற அதிகாரபூர்வ உடைகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவதால், முழு இராணுவத்தின் மரியாதைக்கே சீரழிவை ஏற்படுத்தும் என்றும், மூன்று தசாப்தங்களாக நாட்டுக்காக போராடிய படைவீரர்களின் தியாகமும் இழிவுபடுத்தப்படுவதாக இராணுவத் தலைமையகம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதனடிப்படையில், இலங்கை இராணுவத்தின் மரியாதையை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தலைமையகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version