Home இலங்கை சமூகம் யாழ். தமிழரின் சமையல் திறமை.. சர்வதேசங்களில் கிடைத்துள்ள மவுசு

யாழ். தமிழரின் சமையல் திறமை.. சர்வதேசங்களில் கிடைத்துள்ள மவுசு

0

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தோசை வியாபாரம் செய்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர், சர்வதேச ரீதியில் பிரபலமாகியுள்ளார். 

யாழை பிறப்பிடமாக கொண்ட கந்தசாமி திருக்குமார் என்ற நபர், தோசை மனிதன் என அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாட்டு மக்களிடையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

தோசை மேன் 

வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் தனது தள்ளுவண்டி கடை மூலம் தோசை விற்பனை செய்து வருகின்றார். 

திருக்குமார் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கனவுகளுடன் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். 

நியூயோர்க் நகருக்கு சென்றிருந்த காலத்தில் பல்வேறு பணிகளை செய்த பின்னர் தான், தனது தாய் மற்றும் பாட்டியிடம் கற்றுக்கொண்ட சீஸ் மசாலா தோசையை தனது அடையாளமாக மாற்றினார். 

இந்த தோசைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மட்டுமில்லாமல் கனடா, ஜப்பானில் உள்ளவர்கள் கூட தேடி வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version