Home இலங்கை பொருளாதாரம் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸின் யோசனை

சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸின் யோசனை

0

உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடாக உற்பத்தி பொருட்களின் அளவு
நிலைகளை அதிகரிப்பதுடன் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) சுட்டிக்காட்டியுள்ளார். 

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மாவட்டத்தின்
பொருளாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார
வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக அரச
சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர்களின் இருமுகத்தை வெளிப்படுத்திய அரசியல்வாதிகள்

தையல் உற்பத்தி நிலையம்

இதனிடையே பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேவிபுரம்
பகுதியில் பெண் முயற்சியாளர்களால் நடாத்தப்படும் தையல்
உற்பத்தி நிலையம் ஒன்றிற்கும் அமைச்சர் விஜயம்
மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, குறித்த முயற்சியாளர்களினால்
மேற்கொள்ளப்படும் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு அவர்களின் எதிர்பார்ப்புகள்
தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான கடற்றொழில் முறைகள்
அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் துறைசார் தரப்புக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட
அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன்(
நிர்வாகம்) , மேலதிக மாவட்ட செயலாளர் சி.ஜெயகாந் (காணி), பிரதேச செயலாளர்கள்,
மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள்
பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முரணான கருத்துக்களை வெளியிட வேண்டாம் : மைத்திரியை விமர்சிக்கும் வியாழேந்திரன்

இலங்கை மக்களின் நன்மையை பொருட்படுத்தாத அரசாங்கம்: ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version