Home இலங்கை அரசியல் ஸ்ரீதர் தியேட்டருக்குள் புதையுண்டுள்ள உடலங்கள்! விசாரணைக்கு தயார் என்கிறார் டக்ளஸ்

ஸ்ரீதர் தியேட்டருக்குள் புதையுண்டுள்ள உடலங்கள்! விசாரணைக்கு தயார் என்கிறார் டக்ளஸ்

0

யாழில் உள்ள ஸ்ரீதர் தியேட்டரை தோண்டினால் அதற்குள் இருந்து  பல மனித எலும்புக்ககூடுகள் மீட்கப்படும் என பரவும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அலுவலகம் அங்கு அமைந்துள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பரவியுள்ளதாகவும், இது தொடர்பில் எந்த நடவடிக்கைக்கும் தயார் என்றும் கூறியுள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் சிறப்பு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் எவ்வித விசாரணைகளுக்கும் தயார் என கூறிய டக்ளஸ் தன்னை விசாரிப்பதில் எவ்வித அச்சமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

எங்களை பற்றிய பல கதைகள், வாக்கு வேட்டைகளுக்காக அரசியல் இலாபத்திற்காக மற்றும் மக்களை திசைதிருப்புவதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகின்றதே தவிர அதில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறியாமையின் காரணமாக சிலர் தெரிவித்தாலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கை முற்றிலும் வேறு என தெரிந்தும் எங்கள் மீது சேறு பூசுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள டக்ளஸ் மீதான குற்றசாட்டுகளுக்கும், தமிழர் அரசியல் களம் தொடர்பில் அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் பின்வருமாறு பதில் வழங்கியுள்ளார்…

https://www.youtube.com/embed/WsXLytg9dhU

NO COMMENTS

Exit mobile version